தமிழ் | English
  Advertisememt   | Contact Us
Chennai247.com Advertising Contact No : 97109 26094
chennai247_logo Untitled Document  
கிரிக்கெட் சினிமா
மரு‌த்துவ‌ம் ஆன்மிகம்
வர்த்தகம் சு‌ற்றுலா
   
Untitled Document
   
Hot News :
.:பாலஸ்தீனத்தில் மீண்டும் ரத்த ஆறு .:அமெரிக்காவில் வரலாறு காணாத வேலையிழப்பு: வரிக்குறைப்பு செய்ய ஒபாமா யோசனை :..: :..:இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 4 பேர் பலி; பலர் காயம்: :..: சிகரெட் பிடிக்க தடையால் மாரடைப்பு 40 சதவீதம் சரிவு :..:பி.எஸ்.இ: 10303.55 (+27.95) என்.எஸ்.இ: 3126.3 (+4.85) Gold and Silver:Gold (10g) Rs:13365: Silver (1kg)Rs..20700:.
 
  You are here: Chennai247 » News  
 
 
வாக்காளர்களுக்கு செல்போன் கொடுக்கிறார்கள்-விஜயகாந்த்
ஜனவரி 5, 2009
வாக்காளர்களுக்கு செல்போன் கொடுக்கிறார்கள்-விஜயகாந்த்
   
மதுரை: சில கட்சியினர் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று செல்போன் கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று 3-வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் செக்கானூரணி, புளியங்குளம், கொக்குளம், தேங்கல்பட்டி, சிக்கம்பட்டி, கரடிக்கல் உள்பட பல்வேறு கிராமங்களில் தனபாண்டியனுக்கு ஆதரவு திரட்டினார்.

பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில், கட்சி ஆரம்பிப்பது மடம் அமைத்து, `ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாடுவதற்கா?', இல்லை. ஆட்சியை பிடித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்குத்தான் நாங்களும் கட்சி ஆரம்பித்துள்ளோம்.

தைரியம் இருந்தால் என்னை மாதிரி கூட்டணியின்றி தனித்து போட்டியிடுங்கள். பார்ப்போம்.

திமுகவின் பின்னால் ரயில் பெட்டிகளை போல் 10 கட்சிகள் கூட்டணி உள்ளது என்று கூறினார்கள். ஆனால் தற்போது காங்கிரஸ் எனும் ஒரே பெட்டிதான் அவர்களுடன் கூட்டணியாக உள்ளது.

சேலை தருகிறார்கள்:

பொதுமக்களுக்கு பணம் கொடுத்து எனது பிரசாரத்துக்கு வரவிடாமல் சில கட்சியினர் தடுக்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களை விலைக்கு வாங்க முடியாது. கள்ளிக்குடியிலும் கூட மக்களை வரவிடாமல் தடுத்தனர். தற்போது திருமங்கலத்தில் சில கட்சியினர் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை கொடுக்கிறார்கள்.

செல்போன் தருகிறார்கள்:

செல்போன் வழங்குகிறார்கள். தோல்வி பயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடுகின்றனர்.

தேர்தலுக்காக கோடி, கோடியாக செலவழிப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்கி வந்தால் விலைவாசி ஏற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால் அதை விடுத்துவிட்டு காசுகளை கொட்டி வாக்காளர்களை விலைக்கு வாங்கி வருகிறார்கள்.

காசு வாங்கி ஓட்டுப்போட்டீர்கள் என்றால் உங்கள் ஊருக்கான அடிப்படை வசதிகளை கேட்டுச்செல்லும்போது, `நீங்கள் காசு வாங்கிக்கொண்டுதானே ஓட்டுப்போட்டீர்கள்' என தட்டிக்கழித்து விடுவார்கள். எனவே நீங்கள் நல்ல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.

விஜயகாந்த்
 
 
 
 
மேலும்
ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
பெங்களூர் இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குண்டு மிரட்டல்
தலைநகர் டில்லியில் நாளை நடக்கிறது முதல்வர்கள் மாநாடு
வாக்காளர்களுக்கு செல்போன் கொடுக்கிறார்கள்-விஜயகாந்த்
   
 
Vsys Technologies Pvt Ltd
Vaarisoft india Pvt Ltd
Deal K Deal
Victorystarts.com
 
 
     

Properties of India  |  Jobs Portal in India  |  College Free Projects  |  IT and ITeS Company in Chennai   |  Best IT and ITeS Training In Chennai  |  Tamil Portal - Enaiyam  | NGO Community & Venture Groups  Technologies Community   |  Open Url Directory – India  Chennai ‘s Best Portal India Sports  Thoughts Of  India |  Properties of India Free Software Project Bidding  |  KBMatrimony  |   DealKDeal SME Online  | Prolans Freelance Project Bidding India   

 

India‘s Best portal Company @ Vsys Technologies Private Limited – Chennai – India  © 2008  and Software Company in Chennai
V-Sys Technologies Private Limited
New No : 21 Old No : 12 , 1st Floor, Teachers Colony,Kasthuribai Nagar , Adyar,Chennai – 600 020, Tel : +91-44-4260 7554, Email : info@vsys.in